
விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெரிதாக எடுத்துக்க வேண்டாம் ! சீமான் பேட்டி!
பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன். விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவை தான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார்.