
விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? சீமான் பேட்டி
திராவிட குடும்பத்திற்குள் கன்னடம் இருக்கிறது என்றால் ஏன் தண்ணீர் கேட்டால் மறுக்கிறார்கள்.கமல் பேசியதற்கு எதற்கு எதிர்க்கிறார்கள்? நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட்டுக்கு எதிராக தமிழகம் மட்டுமே போராடுகிறது. நீட் பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் அது வழியமைத்துள்ளது என தெரிவித்தார். விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் எனக் கூறினார்.