
பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் ! சீமான் அதிரடி !
பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சாராய ஆலையைத் திறந்து பல லட்சம் பேரின் தாலியை நீங்கள் அறுத்தால் நியாயம், நாங்கள் பனைமரம் ஏறினால் குற்றமா? பனைமரம் ஏறுவது பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றும் தொழில். தமிழர் வாழ்வியலில் பனைமரம் என்பது கலந்த ஒன்றாகும். அருகில் இருக்கக்கூடிய புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. என் மாநிலத்தில் மட்டும் நாம் எப்படி போதை பொருளாக மாறியது? சாராய ஆலையை வைத்திருப்பவர்கள் ஆட்சியாளர்கள். கள் கடையைத் திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் எனக் கள்ளுக் கடைகளை மூடுகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கள்ளுக்கு இடம் இருக்கிறது. பா.ஜ.கவினர் கள்ளை ஆதரிக்கிறார்கள். தம்பி அண்ணாமலையே கள்ளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினார். பெரியாரே சினிமா பார்ப்பதை விடவா கள் கேடு? ஏன் கள் கடையை மூடுகிறார்கள்?" எனக் கேட்டார். பனைமரம் சாதி மரம் என்றால், ஏன் தமிழ்நாட்டின் மாநில மரமாக அதை அங்கீகரித்தீர்கள்? வக்கணையாக கருப்பட்டி திங்க மட்டும் பனைமரம் வேண்டும் உங்களுக்கு.