
உலகில் முதன்முறையாக சிறு வயது குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில் அறுவைசிகிச்சை !
கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முதன்மை மையமான ரேலா மருத்துவமனை, 5 வயதான குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்திருக்கும் உலகின் முதல் மருத்துவமனையாக வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் முறையிலான அறுவைசிகிச்சை ஆகிய இரண்டிலும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை குறிக்கும் விதத்தில் உலகளவில் ரோபோட்டிக் வழிமுறையில் கல்லீரல் மாற்று சிகிச்சையைப் பெற்ற மிகக் குறைந்த வயதுள்ள நபராக இக்குழந்தையை வரலாற்றில் இடம்பெறச் செய்திருக்கிறது.