
ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார்! வெளியான வீடியோ காட்சிகள் !
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா 27 என்ற பெண்ணுக்கு கவின் குமார் என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது திருமணத்தின்போது வரதட்சணையாக 300 பவுன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி செலவில் திருமணம் செய்யப்பட்டது. 500 பவுன் செய்வதாக சொல்லிவிட்டு 300 பவுன் மட்டும் கொடுத்ததாகவும் கவின்குமாருக்கு தொழில் துவங்கி தர வேண்டும் எனவும் மாமனார் மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கவின்குமார் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்ததாலும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பி வைத்துவிட்டு தென்னை மாத்திரைகளை உட்கொண்டு காரில் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவின் குமார் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மாமியார் சித்ராதேவி உடல்நிலை காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் வீட்டு காவலில் உள்ளார். இந்நிலையில் ரிதன்யா திருமணத்தின் பொழுது கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் வால்வோ காரில் அவர் மகிழ்ச்சியாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.