எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்! திண்டுக்கல்லில் எலி ஜோசியம் பார்க்க கூடும் மக்கள் கூட்டம் !
வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட உயிரினங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிளி ஜோசியம் பார்த்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து எலி ஜோசியத்திற்கு மாறி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் அருகே ஜோசியர் ஒருவரின் எலி ஜோசியத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.