Breaking News

Share this Video

பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம். பாமகவுக்கு நான் தான் தலைவராக இருப்பேன். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார். பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி ஆசை எனக்கு இருந்ததில்லை. கூட்டணி குறித்த விஷயங்களுக்கு நிர்வாகிகளை அழைத்து பேசுவோம். தலைவராக பொறுப்பேற்றதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனரும் நான்தான். பொதுக்குழு, செயற்குழு கூடி தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுப்போம். என்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் பேட்டி

Related Video