
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் ! பாமக தலைவரும், நிறுவனருமான ராமதாஸ் பேட்டி !
அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் போக்கு வெடித்தது. '35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில், அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.என்ன தவறு செய்தேன் என்று மக்கள் மத்தியில் கேள்வி கேட்டு, என்னை குற்றவாளி ஆக்கிவிட்டார். நான் அவருக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும். அன்புமணியின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். என்னை குற்றவாளி ஆக்கி அன்புமணி அனுதாபம் தேடப் பார்க்கிறார். என்று பாமக தலைவரும், நிறுவனருமான ராமதாஸ் பேட்டி !