புதுச்சேரியில் ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர்களை மிரட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ! வைரல் வீடியோ

Share this Video

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற தனியார் வாடகை கார் மற்றும் இருசக்கர வாகன சேவை மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் பல்வேறு இடங்களில் தனியார் செயலிகள் மூலம் இயங்கும் வாடகை கார் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களை மடக்கிப்பிடித்து மிரட்டுகின்றனர்.இந்நிலையில் புதுச்சேரியில் ரேபிடோ தனியார் செயலி மூலம் இரண்டு சக்கர வாடகை வாகனத்தில் சுற்றுலா பயணியை ஏற்றிச் சென்ற ஓட்டுநரை ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்து மிரட்டும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Video