FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 10பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரம் செய்வார்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார். 

Share this Video

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள யானைமலை ஒத்தக்கடையில் மன்னர் வளைகுடா என்ற பெயரில் மீன் கடை உள்ளது. இந்த மீன் கடையை வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மீன் கடை தொடங்கி 3 ஆண்டுகளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, இந்த மீன் கடையில் ஒரு கிலோ மீன் வாங்கும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அந்த பகுதி முழுவதும் போஸ்டரையும் ஒட்டினார். 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடைகளில் கூடுவார்கள். அசைவ பிரியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மதுரையில் இந்த அறிவிப்பை கேட்டவுடன் சும்மாவா ??இருப்பார்கள் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மீன் கடை முன்பு குவிந்து வரிசையில் நின்ற மீன்களை வாங்கி சென்றனர். சமீப காலமாக தங்களது வியாபார யுக்தியை உரிமையாளர்கள் பல்வேறு விதமாக கையாண்டு வரக்கூடிய வேலையில் மதுரையைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர் ஒரு கிலோ மீன் வாங்கினால் ஒரு கிலோ மீன் இலவசம் என்று ஆஃபர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Related Video