
பெண்களிடம் ஆபாச சைகை காட்டியவரை தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
பெண் ஒருவர் அங்குள்ள வயல்வெளியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது வசவப்பனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாயாண்டி (52) என்பவர் அங்கிருந்த பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பெண்கள் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அங்கு வந்து மாயாண்டியை சரமாரியாக தாக்கினர். இதில் மாயாண்டிக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.