
உங்களுக்கு திராணி இருந்தால், திமுக மற்றும் அதிமுகவோடு இணையாமல் நின்று வெற்றி பெற்று காட்டுங்கள்
உள்ளூரில் ஓணான் பிடிக்கத் தெரியாத ஒருவர் அரசியலில் யானை பிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய எ.வ.வேலு அன்புமணி ராமதாஸ் அவர்களே உங்களுக்கு செல்வாக்கு இருந்தால், தெம்பு, திராணி இருந்தால், திமுக மற்றும் அதிமுகவோடு இணையாமல் நின்று வெற்றி பெற்று காட்டுங்கள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என பொது பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அன்புமணிக்கு சவால் விட்டார்.