2011ல் எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் உடல்நிலை மோசமாவதற்கு காரணம் - பிரேமலதா ஆதங்கம்

2011ல் கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சொந்த கட்சி எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் தற்போதைய உடல்நிலைக்கு காரணம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Share this Video

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்தை திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து அவருடன் உருதுணையாக இருந்து சினிமா, அரசியல் என அனைத்து தளங்களிலும் அவருடன் பயணித்து உள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அரசியலில் பெண்கள் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம். அதற்கு ஒரே ஒரு உதாரணம் புரட்சித் தலைவி ஜெயலலிதா. கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொண்டர்களுக்கு அன்னியாகவும், அன்னையாகவும் இருந்து நான் பணியாற்றி வருகிறேன். ஆரம்ப காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் தேமுதிக இருந்தபோது தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்தது.

2011ல் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், அடுத்த 3 மாதங்களில் தேமுதிக எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கட்சிக்கும், கேப்டனின் உடல் நிலைக்கும் சறுக்கலாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Related Video