மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..
கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பது தொடர்பான புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுக்குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும் தனியார் அமைப்பினர் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.! உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்- கண்கலங்கிய கனிமொழி
அதுமட்டுமின்றி மாநகராட்சி பள்ளி வளாகத்திறகுள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகிறார்.இதனிடையே மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:சில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் தனக்கு தூக்கமற்ற இரவுகளை தருகிறது- மு.க.ஸ்டாலின் வேதனை