Armstrong Murder Video : ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கொலையாளிகள்.! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்ட போலீஸ்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான சிசிடிவி காட்சியை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Share this Video

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் இன்று காலை தப்பி முயற்சி செய்த காரணத்தால் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். 

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் ஆம்ஸ்ட்ராங் நிற்கும் பகுதிக்கு வரும் அந்த நபர்கள் சுத்து போட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி சாய்க்கின்றனர். இந்த காட்சிகள் நெஞ்சை பதறவைக்கிறது. மேலும் 11 குற்றவாளிகளின் அடையாளத்தையும் போலீசார் வீடியோ காட்சி மூலம் வெளியிட்டுள்ளனர். 

Related Video