பனைத் தொழிலாளர்களுக்கு காவல்துறை இடையூறுகளை வழங்கி வருகிறது ! எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு !

Share this Video

தங்களது உயிரை பணயம் வைத்து பனைமரம் ஏறி தொழில் செய்து வரும் பனை தொழிலாளர்கள் மீதுகாவல்துறையினர் இடையூறு செய்து வருகின்றனர். எனவே பனை தொழிலாளர்களால் பணி தொழில் செய்ய முடியவில்லை. என அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு நடத்தப்பட உள்ளது. சொசைட்டியில் பதிவு செய்தால் தான் பனைத் தொழில் செய்ய முடியும் என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று கூறியவர் கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவி வழங்கப்படுகிறது பனைத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது எனவே அதனையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

Related Video