watch : தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி... திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்

முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும்போது மசினகுடியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.

First Published Apr 9, 2023, 12:39 PM IST | Last Updated Apr 9, 2023, 12:39 PM IST

பிரதமர் மோடி இன்று காலை உதகை மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு பொம்மன் பெல்லி தம்பதியை சந்தித்துவிட்டு, அவர்களின் வளர்ப்பு யானைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த அவர். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக மைசூருக்கு கிளம்பினார்.

செல்லும் வழியில் மசினகுடியில் மோடியை வரவேற்க மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். அப்பகுதி மக்களின் அன்பை பார்த்து திளைத்து போன பிரதமர் மோடி, உடனடியாக காரில் இருந்து இறங்கி வந்து அங்கிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்துவிட்டு அவர்களின் அன்பிற்கு நன்றி கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். 

Video Top Stories