முதுமலையில் யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி
முதுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்த யானைகளுக்கு உணவளித்தார்.
பந்திப்பூர் சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதுமலை வந்த பிரதமர் மோடி, அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த யானைகளுக்கு தன் கையால் உணவளித்து மகிழ்ந்த அவர், அங்கிருந்த யானைப் பாகன்களிடமும் உரையாடினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதேபோல் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் - பெல்லியையும் சந்தித்து பேசிய பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து மைசூரு கிளம்பிச் சென்றார். அப்போது மசினகுடியில் வழிநெடுகிலும் கூடி இருந்த பாஜகவினரும், பழங்குடியின மக்களும் ஆடிப்பாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.