
தூத்துக்குடி வந்தார் பிரதமர் மோடி..! ஏர்போர்ட்டில் வரவேற்ற ஆளுநர் R.N.ரவி மற்றும் எல்.முருகன் !
2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்ததோடு, பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்சி புறப்பட்டு வந்த மோடியை அமைச்சர் கே என் நேரு உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்தித்து பேசினார்