திமுகவுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ! - த.வெ.க தலைவர் விஜய் !
மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் . குறைந்தபட்ச அரசியல் அறத்தை தொலைத்த ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கனவே சொன்னது போல் உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. பிளவுவாத சக்திகளுக்கு சாமரம் வீசுய காரணத்தலாலேயே ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூற்றே தற்போது ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் நாங்கள்தான் திமுகவிற்கு எதிரான ஒரே அணி என்று பாஜகவும், தாங்கள்தான் பாஜகவுக்கு எதிரான அணி என்று திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். மக்கள் இவர்களுக்கு நல்ல பாடத்தை புகட்டுவர் - த.வெ.க தலைவர் விஜய் .