அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் ! அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு...முதல்வர் ஸ்டாலின் பேட்டி !

Share this Video

அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்தார் . மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு மிகுந்த ஆபத்தானது.தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39ல் இருந்து 31 ஆக குறையும் அபாயம். 8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதிவேளை செய்கிறது. எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்குகிறேன். கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டிற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

Related Video