Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!

Papanasam Temple : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் சரபோஜிராஜபுரம் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தான் அருள்மிகு வடபத்திர காளியம்மன் திருக்கோயில்.

Share this Video

இந்த ஆலயத்தின் திருநடன திருவீதியுலா காட்சி இந்த வெகு விமர்சையாக நடைபெற்றது. குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க, அக்னி சட்டியை கைகளில் ஏந்தியவாரும், திரு நடனம் ஆடியவாரும் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர். 

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பாபநாசம் பகுதியில் நடக்கும் வெகு விமரிசையான விழாக்களில் இந்த திருநடன விழாவும் ஒன்று. 

Related Video