யார் இந்த அருண் IPS? - சென்னையில் ரவுடியிசம் ஒழியனும்; அது தான் என் டார்கெட்; பளிச் பதில்!!

Arun IPS : சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக திரு. அருண் ஐபிஎஸ் இன்று ஜூலை 8ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்று உள்ளார்.

Share this Video

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுடைய மறைவுக்கு பிறகு சென்னையில் புதிய போலீஸ்கர் கமிஷனராக இன்று பதவியேற்றுள்ளார் திரு. அருண் ஐபிஎஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க உள்ளதாக கூறினார். 

மேலும் ரௌடிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார் அருண். தமிழகத்தில் ஒப்பிட்டு அளவில் குற்றச் செயல்களை குறைந்து வருவதாகவும், சென்னையை பொருத்தவரை அதிக கவனத்துடன் தான் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். காவலர்கள் தங்கள் கடமை அறிந்து செயல்பட வேண்டும் என்றார் அவர். 

ஏற்கனவே சென்னையில் பல்வேறு பணிகளில் தான் ஈடுபட்டு வந்துள்ளதால் சென்னை மாநகரம் தனக்கு புதிய இடமல்ல என்று கூறிய அருண் காவல்துறையையும் தமிழக அரசையும் பெருமையடைய செய்யும் வண்ணம் செயல்படுவேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

Related Video