Accident : நாங்குநேரி அருகே நடந்த கோர விபத்து - பைக் மீது பின்னல் வந்த கார் மோதி இருவர் உடல் நசுங்கி பலி!

Car and Bike Accident : நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளத்தில் நான்கு வழிச்சாலையில், மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Share this Video

நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையே வாகைகுளம் நான்கு வழிச்சாலையில் மோட்டார் பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து மோட்டார் பைக் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் வள்ளியூர் அருகேயுள்ள இளையநயினார்குளத்தைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 71 ) என தெரியவந்தது. இவர் திருமண புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார் என தெரிகிறது. மேலும் இறந்த மற்றொருவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Video