Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?

Namakkal Government Bus : ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஒருபக்க சக்கரத்தில் இருந்த போல்ட் மற்றும் நட்டுகள் உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published May 12, 2024, 11:08 PM IST | Last Updated May 12, 2024, 11:08 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேலகவுண்டம்பட்டி செல்லும் R12 என்ற பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பட்டணம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வண்டியின் பின் சக்கரத்திலிருந்து சத்தம் கேட்டது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் இறங்கி வந்து பார்த்தபோது பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்கு போல்ட் மற்றும் நட்டுகள் உடைந்து இருந்தது தெரியவந்தது. 

பின் சக்கரத்தில் 8 போல்டு மற்றும் 8 நட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில், ஏற்கனவே 4 போல்ட் மற்றும் 4 நட்டுகள் இல்லாமல் ஓட்டி வந்த  நிலையில் மீதமிருந்த அந்த 4 போல்ட் மற்றும் 4 நட்டுகள் வண்டி பயணித்துக்கொண்டிருக்கும்போதே உடைந்துள்ளது. போல்ட் மற்றும் நட்டுகள் இல்லாததால் பேருந்தைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டு, ஓரமாக நிறுத்தி வைத்தனர்.