
திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது ! நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது போதை கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது.எல்லா கிராமங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைக்கிறது.கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது 15 சதவீதம் குழந்தைகள் மீதான குற்றம் அதிகரித்துள்ளது பாலியல் குற்றங்கள் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 631 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 18,200 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது 17 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60% அதிகரித்துள்ளது தற்கொலைகளின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.சமூக நீதி குறித்து முதலமைச்சர் அதிகம் பேசி வருகிறார்.அவரோடு திருமாவளவன் இருக்கிறார். பாதாள சாக்கடையில் பணியாற்றுபவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை அதிலும் மரணங்கள் நிகழ்கிறது.வேங்கை வயல் சம்பவம் குறித்து தற்போது வரை அவர் வாய் திறக்கவில்லை. என நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு.