
பாமக உட்கட்சி மோதலில் பாஜகவுக்கு தொடர்பில்லை - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் !
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மாநகராட்சிகளில் நோய் பரவல் அதிகரித்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.