Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

Share this Video

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் கடந்த 8ம் தேதி தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக இதில் தொடர்புடைய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர்சாதிக் என்பது தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை ஆட்டோ மூலம் விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது தனிப்படை போலீசாரிடம் கையும் களவுமாக அவர் சிக்கினார். 

மேலும் அவரிடமிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் தப்பி செல்ல முயன்ற ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நாகூர் காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. சிசிடிவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை 2 வாரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Related Video