
பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சீமான் பேசுவதை கண்டதும் அங்கு நின்றார். அப்போது அண்ணா பேசுங்கள் பேசுங்கள் என்று அவர் கோஷமிட்டார். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் போலீசார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த இளைஞர் அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் கட்சியினர் அவரை கழுத்தை பிடித்து தள்ளியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.