நாகை அருகே மியான்மர் நாட்டைச் சேர்ந்த தெப்பம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு !! வைரல் வீடியோ !
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில் மர்மமான முறையில் வெளிநாட்டை சேர்ந்த 20 அடி நீளம் கொண்ட 20 கேன்கள் கட்டப்பட்ட மிதவை தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த மீனவ கிராமத்தினர் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.