முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை ! எல்.முருகன் ஆவேசம் !

Share this Video

பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனிதத் தருணத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகிறேன் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும் அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு இது.இது இந்த மண் ஆன்மீக மண் என்பதை உலகுக்கு நன்றாக நிரூபிக்கிறது எனவும் கூறினார். முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்கத் துணிவார்களா? என்றார. மாநாட்டிற்கு காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லையெனவும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், தேவையான ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை எனவும் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

Related Video