
திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
ஜனநாயகத்தின் கட்டமைப்பாக உள்ள தேர்தலை தனது கைக்குள் வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி முடிவுகளை தீர்மானிக்கிறது.இது தேர்தல் என்ற கட்டமைப்பையே சீர்குலைப்பதாக உள்ளது.திரை உலகத்தின் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை ஆளுங்கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. அது ஒரு கலை சார்ந்த படைப்பு.சமூக ஊடகங்களில் தணிக்கை செய்யப்படாத எவ்வளவோ நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன.