நாட்டாமை சரத்குமார் தொணியில் கிளாசாக மாட்டுவண்டி ஓட்டி மகிழ்ந்த அமைச்சர்

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தனது சொந்த தோட்டத்தில் மாட்டு வண்டி ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Sep 22, 2023, 8:27 PM IST | Last Updated Sep 22, 2023, 8:27 PM IST

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தனது சொந்த தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “நெடுநாட்களுக்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள எனது தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாடுகளோடும், கன்றுகளோடும் சில நேரத்தை கழித்து, வெகு நாட்களுக்குப் பிறகு மாட்டு வண்டியையும் ஓட்டி மகிழ்ந்தேன்.

கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளுடன் சிறிது நேரம் திழைத்து இருந்தேன், அலுவல் மணி தொலைப்பேசியில் அடித்த வரை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Video Top Stories