அமைச்சர் முத்துசாமி மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்

Share this Video

கடந்த முறை மழை பெய்யும் பொழுது ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்து அது சரி செய்யப்பட்டு உள்ளது, இந்த ஏற்பாடுகள் பற்றி முதலமைச்சர் காலையில் கேட்டறிந்தார் என தெரிவித்தார்.வால்பாறையில் உள்ள குழுவினரே தற்போதைக்கு போதுமானவர்கள் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அங்கு நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுற்றுலா பயணிகள் எங்கு செல்ல கூடாதோ அங்கெல்லாம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுலாப் பயணிகள் மாற்று பாதையில் செல்வதற்கும் வழிவகை உள்ளதா என்று ஆராய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்படுவது போன்று இருக்கின்ற பாறைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். வீடுகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தாசில்தார்கள் சென்று உள்ளார்கள் நிவாரணம் குறித்து ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள் என தெரிவித்தார்.

Related Video