இது ஆர்கியூமென்ட்கான இடம் கிடையாது! செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் எல். முருகன்
மத்திய இணை அமைச்சர் முருகன் புதுச்சேரியில் நிதி நெருக்கடி ஒருபோதும் இல்லை ஆளுநரும் முதல்வரும் கேட்ட நிதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று இதுவரை வழங்கிய நிதியை பட்டியலிட்டார்.. தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மத்திய அமைச்சர் முருகன் செய்தியாளர்களை பார்த்து நான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் நல்லா இருக்காது என்றும் இது ஆர்கியுமென்ட் செய்யும் இடம் கிடையாது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் ஒன்று சேர்ந்து எல் முருகனிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட செய்தியாளர் சந்திப்பு சலசலப்பில் முடிந்தது.