
கோவை–மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிக்கிறது பாஜக அரசு ! செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
கோவை–மதுரை மெட்ரோ திட்ட நிராகரிப்பை கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கோவை–மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை (DPR) மாநில அரசு ஏற்கனவே வழங்கி 15 மாதங்கள் கடந்துவிட்டதாகவும், உலக வங்கி குழுவும் பலமுறை ஆய்வு செய்துள்ளதையும் குறிப்பிட்டார்.