பயந்து போறேனா? ஹோலி கொண்டாட போறேன் சாப்; சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்

நாங்கள் பயந்து ஊருக்கு செல்லவில்லை. ஹோலி கொண்டாட போகிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து இங்கு தான் வருவோம். சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளியின் கருத்து.

First Published Mar 4, 2023, 5:52 PM IST | Last Updated Mar 4, 2023, 5:52 PM IST

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆய்வு செய்யத “AsiaNet News Tamil” களத்தில் இறங்கி ஆய்வு செய்தது.

இது தொடர்பாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் கேட்ட போது நாங்கள் அனைவரும் ஹோலி கொண்டாடுவதற்காக ஊருக்கு செல்கிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து மீண்டும் இங்கு தான் வருவோம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

Video Top Stories