Mayor Priya

Share this Video

சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அன்னம் தரும் அமுதக்கரங்கள் என்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு பதிலாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டார்.புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசும் என்பதால் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தூய்மை செய்து அகற்றி இருந்தனர்.இருப்பினும் துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாக மேயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய மேயர் பிரியாஇந்த புகார் குறித்து உரிய ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும்.இந்த மாதிரியான பிளீச்சிங் பவுடர் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய தரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

Related Video