Maruthamalai Temple | மருதமலை கோவில் வேல் திருட்டா? அறநிலையத்துறை விளக்கம்!

Velmurugan s  | Published: Apr 3, 2025, 4:00 PM IST

கோவையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் மாயமானது. இது அறநிலையத்துறைக்கு சொந்தமான மண்டபம் இல்லை என்றும், கோயிலில் இருந்து திருடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக திரு. குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Read More...

Video Top Stories