
கமலஹாசன் பேசுகின்ற பொழுது கவனத்துடன் பேச வேண்டும் ...! மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற பொழுது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கின்றோம் என தெரிவித்தார். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் என்பதை இந்த துயர நிகழ்வு நமக்கு உணர்த்தி இருப்பதாக தெரிவித்தார். கமலஹாசன் பொது வாழ்க்கையில் இருக்கின்றவர் என தெரிவித்த அவர் அரசியலுக்கு மட்டும் ஒரு பகுதி பொது வாழ்க்கை அல்ல, திரைப்படங்களில் நடிக்கும்போது கூட பொதுமனிதராகத்தான் இருக்கிறார் எனவும் பேசுகின்ற பொழுது கவனத்துடன் பேச வேண்டும் என கூறினார். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் தமிழகம் கொந்தளிக்காதா எனவும் கேள்வி எழுப்பினார். தேவையற்றதை பேசுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற உரிமை பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடையாது என தெரிவித்தார். கமலஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.