Watch : நெல்லை பேராத்து செல்லி அம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லை வண்ணாா்பேட்டை அருள்மிகு ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வண்ணாா்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் கோவில் அமைந்துள்ளது . இங்கு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 04 -ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இரவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி காலையில் 6 மணிக்கு மேல் 6.40க்குள் கோவில் விமானம் மற்றும் ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் பரிவார தேவதைகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.