மகளிர்க்கு மாதம் ரூ.1000/- திட்டம் ஏகோபித்த வரவேற்பு! குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி!

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு மாஸ் திட்டங்களை  திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

First Published Sep 15, 2023, 8:27 AM IST | Last Updated Sep 15, 2023, 11:49 AM IST

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி சுமார் 1.06 கோடி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று முதல் அவர்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட இருக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின், காஞ்சிபுரத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். 

இதுதொடர்பாக பொதுமக்களிடம் ஏசியாநெட் நியூஸ் தமிழ் கருத்து கேட்கையில், மக்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். சின்ன சின்ன மற்றும் அவசர மருத்துவ செலவுகளுக்கு யாரையும் இனி எதிர்பார்க்க தேவையில்லை என கூறியுள்ளனர். 

Video Top Stories