
மதுரையில் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது ! ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு !
முதல்வர் எந்த சாலையிலே செல்கிறாரோ அந்த சாலை மட்டும் பளீச் ,பளிச்சாக தயார் செய்யப்படுகிறது,ஆனால் மக்கள் பயன்படுத்துகிற நடமாடுகிற அந்த சாலைகள் எல்லாம் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது .முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா? வாக்களித்த மக்களுக்கு எல்லாம் குண்டும், குழியுமான சாலையை பரிசாக தந்துவிட்டு, அந்த வாக்குகளை பெறுவதற்காக வருகிற முதலமைச்சர் சாலைகளை எல்லாம் விமான ஓடுதளம் போல பளீச்சாக என்று உள்ளது முதலமைச்சரை ஏமாற்றவா? மக்களை ஏமாற்றவா? ,நிர்வாகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம். வாக்களித்த மக்களுக்கெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றவில்லை அது குறித்து யாரும் உங்களிடத்தில் சொன்னார்களா என்று தெரியவில்லை. என்று ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு !