Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.29 முதல் மே 10-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.