
மதுரை மாவட்டத்தில் மே 12 உள்ளூர் விடுமுறை.. சித்திரை திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெறுகிறது.