
Madurai Adheenam
ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வீடியோவில்: காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் முழுக்க கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என கூறினார். மேலும் உலக நாடுகளில் நடைபெறும் எந்த விளையாட்டு போட்டியிலும் பாகிஸ்தானை பங்கேற்க அனுமதிக்க கூடாது. முக்கியமாக பாரதம் (இந்தியா) பாகிஸ்தான் உடன் விளையாடவே கூடாது. பாகிஸ்தானை ஐ.நா.வில் ஒரு அங்கமாக வைத்திருப்பதை விட்டுவிட்டு அவர்களை நீக்கிவிட வேண்டும். உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதையுமே அனுப்பக் கூடாது. பயங்கரவாதத்திலும் மதத்தை சொல்லச் சொல்லி கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது. தீவிரவாதங்களின் அமைப்பே பாகிஸ்தான் தான். எல்லை கதவுகள் மூடப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.