
எடப்பாடி பழனிசாமிக்கு குஷி.. அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.