S.P. Velumani : "அதிமுக தான் பெரிய கட்சி.. பா.ஜ.க கணக்கிலேயே இல்லை" - தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி!
Minister S.P Velumani : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் சிறுப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி "அதிமுக-வை பொருத்தவரை வரும் தேர்தல் மிக முக்கியமானது.. தொண்டர்களை நம்பி களம் இறங்கியுள்ளோம்.. தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதையுமே செய்யாத ஆட்சி திமுக ஆட்சி..மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என மக்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் கூட அதிமுக விற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.. இந்திய அளவில் வேண்டுமானால் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம் ஆனால் தமிழகத்தில் சிறிய கட்சி தான்..மூன்று அல்லது நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது..அதிமுக தயவில் தான் அவர்களுக்கு தமிழகத்தில் சில எம்.எல்.ஏ க்கள் உள்ளனர்..எனவே அதிமுக திமுக இடையே தான் இத்தேர்தலில் போட்டி..பாஜக கணக்கிலேயே இல்லை" என பேசினார்..
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக நீலகிரி தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் மேட்டுப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை போக்க புறவழிச்சாலை திட்டம் கொண்டு வருவேன் என பேசினார்.