Asianet News TamilAsianet News Tamil

Election : மக்களவை தேர்தல் 2024.. தமிழகத்தில் வெற்றி நிலவரம் என்ன? - தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு!

Loksabha Election 2024 : வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்கவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது, மேலும் அதன் முடிவுகளும் இப்பொது வெளியாகியுள்ளது. முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் சார்பில், மாநில அளவில் தேர்தல் கள ஆய்வு முடிவுகள், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நாற்பது தொகுதியில் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்படி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி 30 முதல் 34 தொகுதி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. 

அதிமுக தலைமையிலான கூட்டணி 0 முதல் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், பாஜக தலைமையிலான கூட்டணி 0 முதல் 5 தொகுதி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் வாக்கு சதவீதம் எப்படி இருக்கும்? 

திமுக கூட்டணி 
43 - 49%

அதிமுக கூட்டணி
16.20 - 20%

பாஜககூட்டணி
18.57 - 24.06 %

நாம் தமிழர் 
6.87 - 12.02%

பிற காட்சிகள் 2.54 - 4% வாக்குகளை பெறும் என்று ஐந்து ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது.

Video Top Stories