Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!

Vanathi Srinivasan : ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

First Published Apr 14, 2024, 9:51 PM IST | Last Updated Apr 14, 2024, 9:51 PM IST

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசி அவர் "நாட்டில் உள்ள இளைஞர்கள் சொந்தமாக சம்பாரித்து சொந்த காலில் நிற்க பிரதமர் நினைக்கிறார்".

2047 ம் ஆண்டு வரும் போது ஒரு வளர்ச்சி அடைந்த இந்தியாவை பார்க்கனும் என்று பிரதமர் நினைக்கிறார், இந்தியா என்று சொன்னால் வெளிநாட்டில் மோடி நாட்டில் இருந்து வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பிரதமர் தன் நாட்டு மக்கள் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு உள்ளார் என்று வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். 

10 வருஷமாக மக்களுக்காக உழைத்து கொண்டு பிரதமர் மூன்றாவது முறையாக அவர் தான் பிரதமர் ஆகப்போகிறார். அதனால் கரூர் பாஜக வேட்பாளர் செந்த்நாதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எங்களுக்கு கரூர் என்றாலே ஒரு பயம், கரூர்காரங்களை பார்த்தால் தமிழ்நாடே பயந்து கொண்டு இருக்கிறது. ஒரு தம்பி கோவையில் போட்டியிடுகிறார், அது போல் கரூரில் போட்டியிடும் செந்தில்நாதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Video Top Stories